
இலங்கை பூப்பந்து வீராங்கனை ஓஷதி குறுப்பின், இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் நடைபெற்றன.
இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.
கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி பல சர்வதேச பூப்பந்துப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
2016ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் அணிப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஓஷதி குறுப்பு, வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓஷதியின் பூதவுடல் தற்போது பொரலஸ்கமுவவிலுள்ள மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் இன்று பிற்பகல் இறுதிச்சடங்குகள் இடம்பெற்றன