வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட கடற்றழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்றது குறித்த கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
மீனவர்களின் பிரச்சனைகளை சரியாக ஆராய்ந்து அதனை ராஜதந்திர ரீதியில் நகர்த்த வேண்டிய தேவையுள்ளது
அந்த விடயம் தொடர்பில் கடந்த வாரமும் யாழ் மாவட்ட ரீதியில் கலந்துரையாடி இருந்தோம் அதேபோல இன்றைய தினம் வடமாகாணத்திற்குட்பட்ட நான்கு மீனவ சங்கப் பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடி இருக்கின்றோம்
இந்த கலந்துரையாடலின் அடிப்படையிலே 4 மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் எங்களுக்கு ஆதரவு தருமாறும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதற்கு எங்களோடு இணைந்து செயற்பட வருமாறு நாங்கள் கோரியிருக்கின்றோம்
அதனடிப்படையில் எதிர்காலத்தில் வடக்கு மீனவர்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் செயற்படுவதற்கு அதாவது நான்கு மாவட்டங்களிலும் இருக்கின்ற கூட்டுறவுச் சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது தான் எங்களுடைய நோக்கமாக காணப்படுகின்றது
அந்த நோக்கத்திற்காகத் தான் இன்றைய தினம் இந்த கூட்டத்தின் தீர்மானமாக எடுக்கப்பட்டது
மீனவர்களிடையே பிளவினை ஏற்படுத்தாது நமது ஒற்றுமையை வலுப்படுத்தி நாம் ஒற்றுமையாக தீர்வினை நோக்கி நகர்வதற்கு அரசியல் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் கட்சி பேதமின்றி மீனவர்களுக்குள்ள பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக ஒரே குடையின் கீழ் கையாள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்
அதேபோல் சிவில் சமூகங்கள் புத்திஜீவிகளுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கின்றோம் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு 4 மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் எம்முடன் இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்
எதிர்காலத்தில் மீனவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடாமல் இருப்பதற்கு 4 மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து சிவில் சமூகங்கள் புத்திஜீவிகளின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம்
யாழ்ப்பாணம் கொழும்பு இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்களில் வாக்குறுதிகளை நாங்கள் நம்ப முடியாது அவர்களின் வாக்குறுதிகள் சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் இந்த இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சனை ஐந்து வருடங்களுக்கு முன்னரே தீர்க்கப்பட்டு இருக்கும் ஆனால் இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்களில் உறுதிமொழியினால் எமக்கு எந்தவித பயனும் கிடைக்காது எனவே இது போன்ற விடயங்களை தாங்கள் அறிந்தே என்றன