மட்டு.செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக விழா –

மட்டக்களப்பு செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்தன, அஷ்ட பந்தன, நவகுண்ட பட்ஷ, மஹா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்திவிழா நேற்று நிறைவுற்றது.

குறித்த ஆலய வரலாற்றில் முதற் தடவையாக சுவாமி யானையில் ஏறி பவணி வந்ததுடன் கும்பாபிஷேகப் பெருவிழாவில் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம்- நயினைதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேவஸ்தான தருமை ஆதீன ஆகம பிரவீனா ஆசீர்வாத பிரசன்னம் சிவ ஸ்ரீ ஐ. கைலை வாமதேவ குருக்கள் கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம குருவாக பணியாற்றினார்.

சுமார் பண்ணிரண்டு வருடங்களின் பின்னர் இவ்வாலயம் முழுமையாகப் புரமைப்புச்செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டதாக ஆலயத்தின் அரங்காவலர் சபைத்தலைவர் சீனித்தம்பி செல்வராசா தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 7 ஆந் திகதியன்று ஆரம்பமான விழாவில் தினமும் யாகபூஜைகள் நடைபெற்று கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெற்றதாக ஆலயத்தின் அரங்காவலர் சபையின் போஷகர் எம். தவராசா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews