கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் தங்கவேலாயுதபுரம் விவசாய நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பழப்பயிர் மற்றும் மரவள்ளிச் செய்கையினை விரிவாக்கும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தினால் மானிய அடிப்படையில் விதைகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அதற்கான கள விஜயம் ஒன்றும் நேற்று இடம்பெற்றது.
இதன்போது தங்கவேலாயுதபுரம் பகுதியில் பயிரிடப்பட்ட பப்பாசி மற்றும் மரவள்ளி செய்கைகளை அறுவடை செய்தல் மற்றும் விவசாயிகளின் தேவைகளை கண்டறிதல் ஆலோசனைகள் வழங்கி உள்ளுர் உற்பத்திகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நேற்று மாலை முன்னெடுக்கப்படடது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஜ.ஜே.கே.முத்துபண்டா மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம். ஹூசைன் பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி.திசாநாயக்க லாகுகல வலயத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் விவசாயப் போதனாசிரியர்கள் பாடவிதான உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.