
யாழ்.குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றய தினம் இரவு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து தீ பற்றி எரிந்துள்ளது.
இரவு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தவர்கள், சமையல் முடிந்து அடுப்பை அணைத்துவிட்டு சென்றிருந்த நிலையில்
திடீரென எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுடன் தீ பற்றியுள்ளது. எனினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.