
கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க மற்றும் அவருடைய குழுவினர் எதிர்வரும் 18ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
யாழ்.மாநகரசபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச சபைகளிற்கு பயணிக்கவுள்ளதோடு இரு சபைகளின் அனுபவங்களை
பகிரும் வகையிலேயே இந்த பயணம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர் வரும் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறும்
இந்தப் பயணத்தின்போது மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் சிநேகபூர்வ துடுப்பாட்டமும் இடம்பெறவுள்ளது.
இருநாள் பயணமாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என 70 பேர் இந்த பயணத்தில் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.