
வடமராட்சிகிழக்கு கலாசார பேரவையின் வெளியீடாக இன்றையதினம் சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்” விமர்சனம் எனும் கட்டுரை வெளியீடு செய்யப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜெயபிரதீபா எழுதிய வெளியீடே இன்று காலை 10:00 மணிக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில்
மங்கல விளக்கினை பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி, உதவி பிரதேச செயலர் பசுபதி தயானந்தன், முல்லைத்தீவு வலயக்ககல்வி பணிப்பாளர் இ.தமிழ்மாறன், கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பௌனந்தி, பிரதேச கலாசார பேரவை தலைவரும், கலாசார உத்தியோகத்தருமான பெ.செல்வசுகுணா, நூலாசிரியரின் பெற்றோரான திரு திருமதி ஜெயபாலசேகரம் தம்பதியினர் உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து ஆசியுரையினை சென்/ஹென்றிஸ் கல்லுரி பிரதி அதிபர் அருட் திரு.ஆன்சன் றெஜிக்குமார் நிகழ்த்தினார். தொடர்ந்து வரவேற்புரையினை கலாசார உத்தியோகத்தர் செல்வசுகுணா
நிகழ்த்தினார்
வாழ்த்துரையினை மருதங்கேணி உதவி பிரதேச செயலாளர் தயானந்தன் வழங்கினார். தலமையுரையினை வடமராட்சிகிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி நிகழ்த்தினார்.
வெளியீட்டுரையினை ஜீவநதி பிரதம ஆசிரியர் க.பரணீதரன் வழங்கி அதனை வெளியீட்டு வைக்க முதற் பிரதியினை ஆணிவேர் சமூக அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர் ஜெ.பானுசந்தர் பெற்றுக் கொண்டனர்.
மதிபீட்டுரையினை கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.அ.பௌநந்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மயூரரூபன் ஆகியோர் நிகழ்த்தினர். பிரதம விருந்தினர் உரையினை முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறன் நிகழ்த்தினர். ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நூலாசிரியர் ஜெயப்பிரசாந்தி நிகழ்த்தினர். இந நிகழ்வில் அரச அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.