
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் மார்ச் மாதம் 18 ம்திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்பொங்கல் உற்சவத்தின் முன்னாயத்தக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருலிங்கநாதன் (காணி) தலைமயில் இன்று (15-02-2022) பகல் நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.




இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி (பதில் ) பிரியநந்தினி கமலசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார முறைகளைப் பின்பற்றி இம்முறை பொங்கல் உற்சவத்தினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்ட்டுள்ளது.
அத்துடன் ஆலய சூழலை துப்பரவு செய்தல் வீதிகளை செப்பனிடுதல், குடிநீர் விநியோகம், போக்குவரத்துச் சேவை, பாதுகாப்புச்சேவை, மின்சார வசதி கழிவகற்றல் வர்த்தக நிலையங்களை ஏலமிடுதல், வைத்திய முதலுதவி சேவைகள், தாகசாந்தி நிலையங்கள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதில் ஆலயத்தொண்டர்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்பலர் கலந்துகொண்டனர்.