
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம் பட்டினம் அருகே நேற்று வங்கக்கடலில் ஆளில்லாமல் காணப்பட்ட இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு சிறிதுசிறிதாக மூழ்கி கொண்டிருந்தது.
ஷஅதனை மீட்பதற்காக கடலோர காவல்படையினர் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் அதை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் பெரிய படகு ஒன்றுடன் இன்று காலை மீண்டும் அங்கு சென்ற கடலோர காவல்படையினர் மூழ்கி கொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகை கரைக்கு இழுத்து வருவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியத்திற்குள் இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு கரைக்கு இழுத்து வரப்படும் என்று மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.