வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் கடந்த வருடத்துக்கான பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. 17 தினங்கள் நடைபெறும் ஆலய திருவிழாவில், இன்று 15ம் திருவிழாவான தேர்த்திருவிழா பக்திபூரஜவமாக இடம்பெற்றது.
கொடிதம்பப்பூஜை, வசந்தமண்டபப்பூஜை என்பன இடம்பெற்று, சுவாமி உள்வீதி வலம் வந்து தேரில் ஏறி வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.