வலி. மேற்கு பிரதேச சபையின் சேவைகளை இலகுபடுத்துவதற்கான நடமாடும் சேவை பொன்னாலை வட்டாரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
வட்டாரங்களுக்கு என ஒவ்வொரு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் மக்களுக்குக்கான சேவைகளை இலகுபடுத்தும் நடவடிக்கைகளை வலி. மேற்கு பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக பொன்னாலை கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்று காலை நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்சேவையில், ஆதனப்பெயர் மாற்றம் மற்றும் ஆதன உரிமையை உறுதிப்படுத்தல், ஆதன வரி செலுத்துதல், குடிதண்ணீர் கட்டணம் செலுத்துதல், வியாபார உரிமம் மற்றும் துவிச்சக்கரவண்டி உரிமம் வழங்கல் போன்ற பல சேவைகள் இடம்பெறுகின்றன.
இதில் வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, சுழிபுரம் உப அலுவலக பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர் ந.சிவரூபன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தயாபரன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பார்த்தீபன், பொன்னாலை வட்டாரத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுதர்சினி மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.