இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க முன்வந்திருந்ததாக குறிப்பிட்டார்.
எனினும், அந்த கடனை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்தியாவிடம் இருந்து உடனடியான உதவிகளை கோரியிருந்தோம்.
இதனை கருத்திற்கொண்டு 40,00 மெற்றிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.