யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரசியல் கைதி 12 வருடங்களின் பின் விடுதலை.. |

தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைதாகி 12 வருடங்கள் சிறையிலிருந்த தமிழ் அரசயல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – விக்கிணேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டியைச் சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே என்பவரே கொழும்பு நீதிவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால் நேற்று நிரபராதி என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வழக்கின் எதிரியான கந்தப்பு ராஜசேகர் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவின் ஆலோசணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனையின் படி இறுதி யுத்தகால பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கடந்த 2010.10.19 ஆம் திகதி கந்தப்பு ராஜசேகர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews