உயிரிழந்தவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை. என குறிப்பிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இனி கட்டாயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.எனினும், நபரொருவரின் பிரேத பரிசோதனையின்போது சம்பந்தப்பட்ட சட்டவைத்திய அதிகாரியின் விருப்பத்தின் பேரில் மட்டுமே பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் எனவும் புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது