
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் அறவிடப்படவுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் மட்டுமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள். வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் மருத்துவ செலவுகளுக்காக உரிய கட்டணங்களை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செலுத்தியே ஆகவேண்டும்.
இதன் அடிப்படையிலேயே வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கட்டணமாக 5000 ரூபா அறவிடப்படுகின்றது. இப் பணம் உரிய முறையில் அரசாங்கத்தின் கணக்கில் வைப்பிடப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்திய சாலையில் இச் சேவையைப் பெற்றுக் கொள்வோர் எதிர்மறை (negative) முடிவாயின் நேரடியாக விமானநிலையம் செல்லமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.