யாழ்.குப்பிளான் பகுதியை சேர்ந்த வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் குப்பிளான் தெற்கு, குப்பிளான் என்ற முகவரியைச் சேர்ந்த 65 வயதுடைய அம்பலவாணர் சுசீலா என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது