தனியார் கல்வி நிலையத்தில் பெண்களுக்கான கழிப்பறை பகுதியில் நவீன இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் கம்கஹா நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த நிலையத்தில் மேலதிக வகுப்பில் பங்குபற்றிய மாணவிகள் சிலர் இந்த கெமரா தொடர்பில் அறிவித்ததன்.
பின்னர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த கெமராவில் பதிவாகும் காட்சிகள் கையடக்க தொலைபேசி அல்லது மடிக்கணினி என்வற்றினூடாக
பார்வையிடும் வகையில் பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் வகுப்பு உரிமையாளர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் அதிகமானவர்கள்
பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், குறித்த கெமராவை பொறுத்திய நபரை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.