தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் என. தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன் இடம் பெற்ற முக்கிய சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு சண்முகநாதன் தலமையில் சமாச தலமையகத்தில் இடம் பெற்றது. இதில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.
அவர் பாவம் அவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை அவரால் பொறுக்க முடியாமல் அவர் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் ஏன் போராடினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். மக்களுடைய பிரதிநிதிகளாக நாங்கள் மக்களுடன் சேர்ந்துதான் போராடினோமோ தவிர நாங்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கவில்லை. இது முற்றுமுழுதாக மக்களுடைய போராட்டங்களாக நடந்தது. நாங்கள் மக்களுடன் கூட நின்றோம். தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் இவர். அவர் இன்றைக்கு இப்படி சொல்லுவார், நாளை வேறொன்றை சொல்லுவார், அவற்றை எல்லாம் முக்கிய விடயமாக எடுத்து கொள்ள கூடாது.
இதேவேளை கடந்த 12 ம் திகதி வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்க்கான புதிய இயக்குநர் சபையை தெரிவு செய்வதற்கு குறித்த வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் தீர்மானித்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் குறித்த தெரிவை உடனடியாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளரால் கடிதம் மூலம் அறிவிக்கப்ட்டிருந்த நிலையில் கூட்டம் இடை நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலை யில் அண்மையில் கடற்றொழில
அமைச்சரால் வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இடம் பெற்ற சந்திப்பு ஒன்றில் புதிதாக சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுக் கொள்ளாதவர்களையும், தமது கட்சி ஆதரவாளர்களையும் உள்ளடக்கி ஒரு நியமன அடிப்படையில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்திற்க்கு இயக்குநர் சபையை உருவாக்கியிருந்டாகவும் அது ஜனாநாயக விரோதம் என்றும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதன் அடிப்படையில் தான் இன்று பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரனுக்கம் இடையே சந்திப்பு இடம் பெற்றது. இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார், முன்னாள் கோட்ட கல்வி பணிப்பாளர் ச.திரவியராசா, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சி.பிரசாத், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.