மஹாவம்சம் என்ற பாலி மொழி புனைகதை தொடர்பாக எந்த வரலாற்று பக்கங்களிலும் ஒரு கொருசு தகவல் கூட கிடையாது..!சி.வி

இந்தியாவிலிருந்து விஜயன் மற்றும் அவனது தோழர்கள் இலங்கை வந்ததமைக்கு இந்திய வரலாற்று நூல்களில் ஆதாரம் இல்லை. என கூறியிருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.  விக்னேஸ்வரன்,

மகாவம்சம் என்ற புனைகதை பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளமை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மொழி என்ற ஒன்று கிடையாது. என்பதை தெளிவாக காட்டும் நிலையில் 3 ஆயிரம் ஆண்களுக்கு முந்தைய வரலாற்றை கொண்ட இலங்கை தமிழரை விட சிங்களவர்கள் முதன்மையானவர்கள் அல்ல எனவும் கூறினார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற ஈழத் தமிழர் இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்கள் என்னும் தொனிப்பொருளிலான மக்கள் கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் விஜயன் இலங்கை வந்ததாக மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தமை தொடர்பில் இந்தியாவின் பிரபலமான வரலாற்று ஆய்வாளர்கள் தமது நூல்களில் அவ்வாறு குறிப்பிடவில்லை.

மகாநாம தேரர் பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி மகாவம்சம் என்கின்ற புனைகதை இலக்கியத்தில் விஜயன் இலங்கை வந்தமை தொடர்பில் பௌத்த மதத்தை தொடர்புபடுத்தி எழுதியுள்ளார்.

சிங்கள இனம் கிறிஸ்துவுக்குப் பின்னர் 6ம், 7ம் நூற்றாண்டுகளில் வந்த ஒரு இனம் இதை வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மகாவம்சம் பாலி மொழியில் எழுதப்பட்டமை அக்காலத்தில் சிங்கள மொழி பயன்பாட்டில் இருந்திருக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் தமிழ் மக்களின் வரலாறு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளை இற்றவரை கடந்துள்ள நிலையில் வெறும் 700 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிங்கள இனத்தை முதன்மை இனமாக கூற முடியாது.

சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமைவய்ந்த தமிழருடைய இருப்பில் இருந்து கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் சிங்கள இனம் உருவாக்கம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. ஆதித் தமிழர்கள் இந்தியாவின் குமரி கண்டத்தில் இருந்து வருகை தந்ததாக இந்தியாவின் பிரபல வரலாற்று ஆசிரியரான விமலா போப்பிலே தனது வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை நசுக்கும் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்ட அடிஎஸ் ஜனநாயக மற்றும் அப்போதைய ஆளுநர் ஒலிவர் குணதிலக இணைந்து ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தனர்.

1944ஆம் ஆண்டு சோல்பரி ஆலோசனைக்கழு இலங்கை வந்தபோது அவர்களை வர வேண்டாம் என மக்களை டி.எஸ் சேனநாயக்கா ஏவி விட்டார். அப்போதைய பாராளுமன்றத்தில் பொன்னம்பலம் சமஷ்டியை கேட்டு கிடைக்காததால் 50க்கு 50 கேட்டு அதுவும் நிராகரிக்கப்பட்டது.

1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு யாப்பு அப்போதைய தமிழ் தலைவர்கள் ஏற்கத நிலையிலும் அவர் அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட காணி உச்சவரம்புச் சட்டம் தமிழ் மக்களை வெகுவாகப் பாதித்தது. தமிழ் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் பாராளுமன்றத்தில் அப்போதிருந்த தமிழ் தலைவர்களினால் எதுவுமே செய்ய முடியாத நிலையே காணப்பட்டது.

அப்போதைய காலத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்களத் தலைவர்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்காக ஆங்கில மொழியிலே அதிகம் உரையாற்றினார்கள். இதன் காரணமாக சிங்கள ஊடகங்கள் தமிழ் தலைவர்களின் உரைகளை நீக்கிவிட்டு

சிங்கள இனவாத கருத்துக்களை அதிகம் ஒளிபரப்பாகின. தற்போது 13வது திருத்தத்தை அரசியல் அமைப்பில் இருந்து நீக்கி புதிய அரசியல் அமப்பு ஊடாக மாவட்டத்திற்கு அதிகாரம் வழங்கப்போவதாக அழைக்கிறார்கள். மாவட்டத்திற்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலம் அதிகாரத்தை வழங்கிவிட்டோம்

என மாற்ற முடியாது மாவட்ட அதிகாரம் மத்தியின் சிறைக்குள் இருக்கும் ஒரு இடமாகும். ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் இருக்கும் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு சமஷ்ரியை கேட்கிறோம் அதிலும் சமஸ்டியை ஒரு படி மேலே நாம் கேட்கிறோம்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனக் கருதியே மக்கள் வீதிகளில் தாமாக முன்வந்து போராடுகிறார்கள். ஆகவே பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்

அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்காத வரைக்கும் பாராளுமன்றம் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews