அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு மீள்குடியேற்றக் கிராம மக்களுக்காக தூய குடிநீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று 19/02 இடம்பெற்றது.
இவ் கலந்தரையாடல் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜெய்காவின் கிராமிய குடிநீர் வழங்கல் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இந்நிலையில் ஜெய்கா ரிடப் திட்டத்தினை முன்னேடுக்குமாறும் அதன் ஊடாகப் பெறப்படும் நீரினை கஞ்சிகுடிச்சாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் மீள்குடியேற்ற மக்களுக்கு முழுமையாக தூய குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி பொது அமைப்புக்கள் கோரிக்கை தெரிவித்து இருந்தனர். இதற்கு அதிகாரிகள் சம்மதமும் தெரிவித்து ஜெய்கா ரிடப் குடிநீர் திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானங்கள் எட்டப்பட்டன.