ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற நிலையில், குறித்த மாநாட்டு சத்தம் காரணமாக உயர்தர பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது குறித்து வவுனியா நகரசபையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டையடுத்து கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்து மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறின்றி கட்சியின் மாநாட்டை நடாத்துமாறு அறிவித்தல் வழங்கப்பட்டது.
ஒலி பெருக்கியின் அதிக சத்தத்தினால் அருகிலுள்ள வைசப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களிடம்
பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பரீட்சை இடம்பெற்றுவருகின்றது எனவே ஒலி பெருக்கியின் சத்தங்களை குறைத்துக்கொண்டு மாநாட்டை நடாத்துமாறு நகரசபையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது