
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுமி உட்பட 19 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 06 பேருக்கும், சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் 08 பேருக்கும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 03 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.