
வடமராட்சி செவிப்புலன் அற்றோர் நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் காலையில் 9:30 மணிளவில் வடமராட்சி செவிப்புலன் அற்றோர் நிறுவன ஒன்றுகூடல் மண்டபத்தில் அதன் தலைவர் த. செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றது.
மங்கல விளக்குகளை பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் ஏற்றியதை தொடர்ந்து தலைமை உரையினை தலைவர் த.செந்தில்குமார் நிகழ்த்தினார்.
தொடர்ந்து வரவேற்புரையை வடமராட்சி செவிப்புலன் சங்க காப்பாளர் க.கோபாலகிருஷ்ணன் நிகழ்த்தினார். கருத்துரைகளை இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் தலைவர் கோ.வள்ளிகாந்தன் நிகழ்த்தினார்
.





பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை.மகேசன், மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அகல்யா செகராசா, வடமாகாண விசேட கல்வித்திட்ட உதவி கல்வி பணிப்பாளர் வி.விஸ்ணுகரன், உட்பட பலரும் நிகழ்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் க.மகேசன், வட மாகாண சமூக சேவைத் திணைக்கள பணிப்பாளர் அகல்யா செகராசா, வடமராட்சி கல்வி வலய விசேட கல்வித்திட்ட உதவி கல்விப் பணிப்பாளர் வி.விஸ்ணுகரன், வடமராட்சி கல்வி வலயத்தை சேர்ந்த உதவி கல்வி பணிப்பாளர் R.நிர்மலன், கரவெட்டி தலைமை பீட கிராம சேவை உத்தியோகத்தர் ராஜ் குமார், மருதங்கேணி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் வீரகத்திப்பிள்ளை கணேசலிங்கம், வடமராட்சி செவிப்புலனற்றோர் சங்கத்தின் நூற்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள், நலன்விரும்பிகள், என பலரும் கலந்து கொண்டு குறித்த நிகழ்வு சிறப்பித்த குறிப்பிடத்தக்கதாகும்.