50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடக பணியாற்றிய வடமராட்சியின் மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 10:30 மணிக்கு மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம், மைக்கல் நேசக்கரம் ஆகியவற்றின் தலைவர் திரு. வேணுகானன் தலமையில் அவர்களது அலுவலகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை யாழ் ஊடக மையத்தின் நிறுவுனர் திரு தயாபரன், முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியர் பி.பொன்ராசா, ஊடகவியலாளர் கனெக்ஸ், மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும் பிரதம ஆசிரியருமான திரு வித்தியாதரன், ஆகியோர் நிகழ்த்தினார்.
தொடர்ந்து ஏற்புரையே திரு தில்லைநாதன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து மூத்த ஊடகவியலாளர் தில்லை நாதனுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பபட்டு பொன்னாடை போர்த்தியும் நினைவு கேடயமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
இக் கௌரவத்தினை நெல்லியடி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு கழகம், மைக்கல் நேசக்கரம் ஆகியவற்றின் தலைவர் வேணுகானனுடன் மூத்த ஊடகவியலாளர் திரு. வித்தியாதரன், ஊடக மையத்தின் தொடக்குனர் தயாபரன், முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியர் பருந்தாபன் பொன்ராசா, உட்பட்ட பலரும்
சேர்ந்து வழங்கினர்.
தொடர்ந்து மைக்கேல் நேசக்கரத்தின் உதவித்திட்டமாக கல்வி நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆறு துவிச்சக்கர வண்டிகளும், சுமார் 50க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான புத்தகப் பை மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பனவும் மூத்த ஊடகவியலாளர் திரு.தில்லைநாதன், திரு தயாபரன், திரு வித்தியாதரன் பிருந்தாபன் பொன்ராசா உட்பட்ட விருந்தினர்களால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய இந் நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர்கள், மைக்கல் விளையாட்டு கழகம் மற்றும் மைக்கல் நேசக்கரத்தின் உறுப்பினர்கள், நி்ர்வாகிகள், மாணவர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்
வடமராட்சி