நாடு முழுவதும் இன்று 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரசபைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, ஏ – பி மற்றும் சி வலயங்களுக்கு 04 மணிநேரம் 40 நிமிடங்களும் ஏனைய வலயங்களுக்கு 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
நாளாந்தம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 4 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் தேவைப்படுகின்ற போதிலும் நேற்று சுமார் 2 ஆயிரம் மெற்றிக் தொன்களுக்கு
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தேசிய மின் விநியோகம் 550 மெகாவாட் மின்சாரத்தை இழந்துள்ளது.
இன்று எரிபொருள் தேவை 4 ஆயிரம் மெற்றிக் தொன்னாக உள்ளபோதும் தற்போது ஆயிரம் மெற்றிக் தொன்களே கிடைத்துள்ளது.
இதன்படி, 3 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், தேசிய மின்கட்டமைப்பிற்கு 750 மெகாவோட் திறன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.