கடமையின் போது உத்தியோகபூர்வ சீருடையை அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அதிகாரி தனது உத்தியோகபூர்வ சீருடையுடன் காலணிகளை அணிந்து கொண்டு கடமையில் ஈடுபட்டது கமராவில் பதிவாகியுள்ளது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மற்றுமொரு அதிகாரியுடன் இணைந்து அந்த அதிகாரியின் ஆடையை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பொலிஸ் சார்ஜென் தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்த நிலையில், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கடிட்டிருந்தது.
இதன்படி, அவரை சேவையில் இருந்து இடைநிறுத்தியதுடன், குறித்த அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையையும் பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.