
பயங்கவாத தடுப்ப சட்டத்தை நீக்கக்கோரி இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம் இன்று பருத்தித்துறை நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இக் கையெழுத்து போராட்டத்தில் ஆர்வத்துடன் மக்கள் கையொப்பமிட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இந் நிகழ்வில் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோ. இருதயராசா, பருத்தித்துறை நகரசபை உறுப்பினரான திரு நவரத்தினக், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் கு.தினேஸ், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வே.பிரசாந்தன், க.சிறிக்காந்தரூபன், த.சந்திரதாஸ், சி.பிரசாத், சி.தியாகலிங்கம், க.தவயோகநாதன், தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் ச.திரவியராசா மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், இளைஞர், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
வடமராட்சி