
வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இடம் பெற்ற பார ஊர்தி உந்துருளி விபத்தில் 18 வயதுடைய கோயில் சந்தையை சேர்ந்த இளைஞன் ஒருவன் சற்றுமுன் மரணமடைந்துள்ளான்.



இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

மாலிசந்தி வதிரி வீதியில் மாலிசந்தி நோக்கி வந்து கொண்தயிருந்த மோட்டார் சைக்கிளும், வதிரி சந்தி நோக்கி சென்றுகொண்டிருந்த பொறி ரக வாகனமும் மோதிய நிலையில் விபத்துக்குள்ளான இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுவந்த போது மரணமடைந்துள்ளான்.



தற்போது குறித்த கிராம மக்களே சோகத்தில் கூடி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை வளாகத்தில் ஒப்பாரி ஓலமிட்ட வண்ணமுள்ளனர்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.