
கிளிநொச்சி முகமாலை பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது
குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமும், எதிரே வந்த பட்டா வாகனமும் எதிரெதிரே மோதியுள்ளன. குறித்த விபத்தில் தெய்வாதினமாக. ஆட்கள் எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.