
பளைபொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் வீதியில் நின்ற கால்நடையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.




இன்று பிற்பகல் 7.30 மணியளவில் பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த வேளை ஏ9 வீதியில் திடீரென குறுக்கே பாய்ந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.