
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12மீனவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 13ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட தையடுத்து குறித்த 12 இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ் பாலசுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் (25-02-2022) பகல் 11 40 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ் லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இந்திய மீனவர்களை மன்றல் முன்னிலைப்படுத்துமாறும் அன்றைய தினம் குறித்த இரண்டு வழக்குகளுக்கும் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு கட்டளை இட்டுள்ளது.
இதே நேரம் இன்றைய தினம் இந்திய துணை தூதரக அதிகாரிகளும் மன்றில் சமூகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது –