வடமாகாணத்தில் மார்ச் 2ம் திகதி தொடக்கம் 5ம் திகதிவரை கனமழை..!  விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலுக்கு பின்னர் தாழமுக்கம் உருவாக வாய்ப்புள்ளதாக, 

யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

எதிர்வரும் 02.03.2022 புதன்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக 03.03.2022 வியாழக்கிழமை, 04.03.2022 வெள்ளிக்கிழமை  மற்றும் 05.03.2022 சனிக்கிழமை ஆகிய நாட்களில் வடக்கு மாகாணம் முழுவதும் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.

இது மாதிரிகளின்(Models) அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இக்காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுவதில்லை.

எனினும் மாதிரிகள் தாழமுக்கம் உருவாகும் சாத்தியத்தையே வெளிப்படுத்துகின்றன. என கூறியிருக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews