
மகாஜனக் கல்லூரி முன்னாள் கணிதபாட ஆசிரியை அமரர் சௌபாக்கியவதி இராஜரட்ணம் நினைவாக வடமாகாண ரீதியாக தரம் 8 மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட மகாஜனன் கணித, விஞ்ஞான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று இணுவில் அக்ஷய மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்றக்ககுழுக்களின் பிரதித்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் கலந்து சிறப்பித்தார். இப்போட்டிக்கான அனுசரணையை அமரர் சௌபாக்கியவதி அவர்களின் மகனும் பிரபல சட்டத்தரணியும் தொழிலதிபருமான திரு.இராஜரட்ணம் செலவஸ்கந்தன் வழங்கியிருந்தார்.
ஒவ்வொரு பாடங்களிலும் முதலாமிடம் பெற்ற மாணவருக்கு ரூபா 40,000 உம் இரண்டாமிடம் பெற்ற மாணவருக்கு ரூபா 30,000 உம் மூன்றாமிடம் பெற்ற மாணவருக்கு ரூபா 20,000 உம் வழங்கப்பட்டது.
மேலும்ஆறுதல் பரிசில்களாக மூவருக்கு தலா 15,000 உம் நால்வருக்கு தலா ரூபா 10,000 உம் விஞ்ஞான பாடத்தில் மேலும் எழுவருக்கு தலா ரூபா 5,000 உம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மகாஜனக் கல்லூரியிலிருந்து உயர்தரப் பரீட்சையில் 3A சித்தி பெற்ற மாணவர்களுக்கும் மருத்துவபீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கும் தலா ரூபா 40,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.