இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம் பெற்றது.
எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிக்கும் எனும் அச்சத்தில் மக்கள் பெருமளவாக மக்கள் குவிந்து காணப்பட்டனர்.இதனால் அங்கு அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்பட்டதுடன் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக கொள்கலன் மற்றும் மோட்டார் வாகனங்கள் என்பனவற்றுடன் அதிகமக்கள் மிக நீண்டநேரம் காத்திருந்ததை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.