வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று இரவு தொடக்கம் வடமாகாணத்தில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.
மேலும் 4 ஆம் திகதி கனமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்றும், இக்காலப்பகுதிகளில் காற்று பலமாக வீசுவதுடன் இடி மின்னல் தாக்கமும் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடலும் கொந்தளிப்பாக கணப்படலாம் எனவும். எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது