உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் இராணுவ தளம் மீது ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
திங்களன்று உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தின் ஒக்திர்கா நகரில் உள்ள இராணுவ தளத்தின் மீது ரஷ்ய துருப்புக்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 70 க்கும் மேற்பட்ட உக்ரைன் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் Dmytro Zhyvytskyy தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்ய படைகள் சுமி பிராந்தியத்தை முற்றுகையிட்டு வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
தாக்குதல் நடந்த இடத்தில், இடிபாடுகளில் யாரேனும் உயிர் பிழைத்துள்ளார்களா என மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக உக்ரைன் நாடாளுமன்றம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், Grad ஏவுகணைகளால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.