எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய நாட்களில் மிக மு்கியமாக இலங்கை நாட்டிலே உள்ள எரிபொருள் தட்டுப்பாடுகளினபல் மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களை சொல்கின்றனர். அதேநேரம் கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே பொருளாதாரமாகவு்ம, ஜீவனோபாயமாகவும் கொண்டு செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்க மாகாணங்களில் நெற்செய்கை குறிப்பாக பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்கை விவசாயத்திற்கு செல்லுங்கள் என ஒரே இரவிலேயே இந்த அரசாங்கம் அறிவித்ததன் காரணமாக இம்முறை அறுவடை மிகப்பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது.
இதனால் ஏக்கருக்கு 50 மூடைகளை பெற்றுக்கொண்ட வயல் நிலங்களில் ஏக்கருக்கு 5, 7, 10 மூடைகளாகவே அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதனை அடுத்து இயற்கை உரத்துடன் சிறுபுாக செய்கையை மேற்கொள்வதற்கு உழுது தயாரானபொழுது இங்கு டீசல் எனும் எரிபொருள் தடையாக இருக்கின்றது.
அரசாங்கத்திடமிருந்து அவர்களிற்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தால் கிளிநொச்யில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நறிபதை நாங்கள் பார்க்கின்றோம். இது அவர்களை பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் மற்றுமொரு அடியாக விழுந்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் தாம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம். அவர்கள் தமிழ், சிங்கள மக்களை வதைத்த அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக உள்ளது. அந்தவகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள், கோட்டபாயவின் நடவடிக்கைகள் தமது பொருளாதாரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் சோகமான கதைகளை சொல்கின்றார்கள்.
தனியார் ஊடாக உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக அரசாங்கம் சொல்கின்றபொழுதிலும், இங்கு தமிழ் மக்கள் உரத்தினை பெற்றுக்கொள்ளவோ அல்லது காணவோ முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆகவே இது மிகப்பெரிய பின்னடைவையும், இந்த மக்களிற்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கின்றது.
குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது.
சர்வதேச நாணய நிதியம் மற்றம் உலக வங்கிகளுடன் தாங்கள் பேசிக்கொண்டிருப்பதாகவும் நிதியமைச்சர் நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றார். சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் பேசமாட்டோம் என்று அவர்கள் பல தடவை கூறியிருக்கின்றார்கள். இப்பொழுது அந்த நிலைமைக்க இறங்கி வந்திருப்பதுகூடஅவர்களது இயலாமையின் அடுத்தக்கட்ட வெளிப்பாட்டை கொண்டு வந்திருக்கின்றது.
நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்ற இந்த நேரத்தில் அவர்களின் மீட்சிக்கு இந்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால் தாமாக இந்த அரசியல் நிலைமையை விட்டு விலகி மக்களின் வாழ்க்கைக்கான சரியான அரசை அமைத்துக்கொள்வதற்கும், ஒரு தீர்வை பெற்றுக்கொள்வதற்கும் இந்த அரசு வழியை திறந்து விட வேண்டும் என்றுதான் அனைத்து மக்களும் விரும்புகின்றார்கள்.