அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சுப் பதவகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி ஊடக பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 47/2 பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து இன்று மாலை நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சராகவும், உதய கம்மன்பில வலுசக்தி அமைச்சராகவும் பதவி வகித்து வந்தனர்.
இந்நிலையிலிலேயே அவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.