ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தமை, பெற்றுக்கொண்ட கடன் உள்ளிட்ட நிதிகளினூடாக நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு என்ன செய்தது என்பதை கேட்கமுனைவதாகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, ராஜித சேனாரத்ன, சம்பிக்க உள்ளிட்ட சகல தரப்பினரும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு என்று கூறுகின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு நல்லாட்சி அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்.
இதற்கு பிரதானமாக பல காரணங்;கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.