உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைன் தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய அதிபர் புடினின் நேரடி பார்வையின் கீழ் 3 கூலிப்படை அனுப்பப்பட்டு உள்ளதாக சர்வதேச உளவுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூலிப்படையின் ஒரே குறி, ரஷ்ய இராணுவத்துடன் உள்ளே நுழைந்து அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்வதாகும். கடந்த ஒரு வாரத்தில் இப்படையின் 3 தாக்குதல் முயற்சியில் இருந்து ஜெலன்ஸ்கி உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது