தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தயாராகி வந்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கும் நம்பிக்கையிலும் பசில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷவுடன் கொள்கை முரண்பாடு இருந்ததாகவும் அது அவ்வப்போது வெளிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமகால ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது குடும்பத்திற்காக முன்நிற்க நேரிட்டது.
பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டிற்குள் ஜனாதிபதிக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியார் சொத்தாக மாறிவிட்டது. ஜனாதிபதியால் அதனை முறியடிக்க முடியவில்லை. பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது அரசியல் அப்படித்தான்.
நாங்கள் மக்கள் ஆணையின்படி மாத்திரமே செயல்படுகிறோம். மக்கள் ஆணைக்கு எதிராக செல்லும் போது நாங்கள் குரல் கொடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளை நேரடியாக விமர்சித்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தமது அமைச்சுகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.