பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில இன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை ‘அசிங்கமான அமெரிக்கன்’ என்று கூறியதுடன், நாடு எதிர்நோக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கு அவரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
ஒரு அமெரிக்க குடிமகன் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார், நாட்டை இந்த நெருக்கடிக்குள் தள்ளியது யார் என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டை இந்த நிலைக்கு தள்ளியது யார் என்பதற்கான அனைத்து உண்மைகளையும் எழுத்துப்பூர்வ ஆதாரத்துடன் வெளியிடுவேன். இது உள்நோக்கம் கொண்ட சதி எனவும் அவர் கூறியுள்ளார். 1997ல் இந்தோனேஷியா சந்திக்க வேண்டிய நிலைக்கு நாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
இதேவேளை, அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த இருண்ட பாதையில் இருந்து நாட்டைப் பாதுகாக்க தங்களால் இயன்றதைச் செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.