வலி தென்மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மீது இளவாலை போலீசார் இன்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.குறித்த விடயம் தொடர்லில் மேலும் தெரியவருவதாவது
நேற்று முன்தினம் குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது அங்கஜன் இராமநாதனின் பெயரை பயன்படுத்தி சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டிருந்த நிலையில் அவரால் குறித்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலீசில் முறைபாடும் பதிவு செய்திருந்த நிலையில்
இன்றைய தினம் குறித்த. தாக்குதல் சந்தேக நபர் தம்மீது இன்றைய தினம் குறித்த பிரதேச சபை உறுப்பினரும் அவரது குடும்பத்தினரும்
தாக்குதல் நடாத்தியதாக செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் இல்லத்திற்கு சென்ற 15 க்கு மேற்பட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்
போலீஸ் நிலையம் கொண்டு சென்று மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
இதில் பிரதேச சபை உறுப்பினர் பலத்த தாக்குதலுக்கு உள்ளானது டன் அவரது சகோதரியும் பலத்த தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த பிரதேச சபை உறுப்பினரின் சகோதரி மயக்கமடைந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் எந்த ஒரு முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்த. நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த பிரதேசசபை உறுப்பினரின் நண்பர்களால் 1990 நோயாளர் காவுவண்டி சேவைக்கு அறிவித்து அதன் மூலம் குறித்த இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த குறித்து ஏனைய குடும்பத்தினரையும் போலீசார் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தாய், தந்தை, மற்றும் ஒரு சகோதரி, ஆகியோர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு தற்போது உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வடமராட்சி