
இரண்டு நகரங்களில் திட்டமிடப்பட்ட போர் நிறுத்தம் விரைவில் , சம்பவங்கள் வேகமாக நடந்தன. காலையில் இருந்து இதுவரை நடந்தவற்றை மீண்டும் பார்ப்போம்:
ரஷ்யாவும் யுக்ரேனும் பொதுமக்கள் தப்பிச் செல்ல அனுமதிக்கும் வகையில், மேரியோபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் ஒரு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர்.
உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு போர் நிறுத்தமும் முதல்கட்ட வெளியேற்றம் இரண்டு மணி நேரம் கழித்து தொடங்குவதாகவும் இருந்தது.
ஆனால், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், ரஷ்ய படைகள் நகரத்தின் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்ட வழித்தடப் பாதையில் சண்டை தொடர்ந்ததாகவும் மேரியோபோலின் துணை மேயர் கூறினார்.
யுக்ரேன் பொதுமக்கள் வெளியேற்றத்தை ஒத்தி வைத்தது. மேரியோபோலில் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப் பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கிப்பட்டது.
பொதுமக்கள் தப்பிக்கும் வழிகளைப் பயன்படுத்தவில்லை என்றும் யுக்ரேனிய அதிகாரிகள் மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியதாக ரஷ்ய அரசு ஊடகம் கூறியது.
இரண்டு தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக மேயர் கூறினார்.