உலகமெங்கும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் யுக்ரேனிய நகரமான கெர்சனிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நேற்று காலை சுமார் 2000 பேர் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்கள் நகர மையத்தில் அணிவகுத்து, கொடிகளை அசைத்து, யுக்ரேனிய தேசிய கீதத்தைப் பாடியபடி சென்றனர். மேலும், “ரஷ்யர்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்”, “கெர்சன் யுக்ரேனுடையது” என்று முழக்கங்களை எழுப்பினர்.
நகரம் முழுவதும் ரஷ்ய ராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கடந்து செல்லும் ஒவ்வோர் ஓட்டுநரையும் நிறுத்துகின்றனர்.
மேலும், ரஷ்ய படையினர் தாங்கள் பிடிக்க விரும்பும் யுக்ரேனிய ஆர்வலர்களின் பட்டியலை வைத்திருப்பதாக ; கூறியுள்ளனர்.