யுக்ரேனின் துணைப் பிதமர்களில் ஒருவரான ஒல்ஹா ஸ்டெஃபானிஷ்யா, பிபிசி ஒன்னில் ஞாயிறு காலை சோஃபி ராவர்த்துடன் பேசினார்.
அப்போது, “யுக்ரேனிய ரானுவம் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக உள்ளது. இந்தப் படையெடுப்பை மிகுந்த உறுதியோடு யுக்ரேன் எதிர்த்தாலும், இதுவரை போரின் முடிவை நெருங்கவில்லை,” என்றார்.
மேலும், “ரஷ்யாவின் பயங்கரவாதத் திட்டத்தின்” மற்றோர் அலை தொடங்கியுள்ளது என்றவர், “நிலைமை மோசமாகி வருவதாகவும் யுக்ரேனிய நகரங்களில் மருத்துவமனைகள் மற்றும் மழலையர் பள்ளிகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், அதன் வீரர்களின் உயிர்கள் உட்பட ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள், விளாதிமிர் புதினைத் தடுக்கைவில்லை. மாறாக, படையெடுப்பை மேலும் ஊக்குவிப்பதாகக் கூறினார்