கீயவ் நகருக்கு வடமேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ள இர்பின் நகரம், சமீபத்திய நாட்களில் ரஷ்ய மற்றும் யுக்ரேனிய படைகளின் சண்டையில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.
இது ஹோஸ்டோமல் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. குடியிருப்பு கட்டடங்களும் சாலைகளும், பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால் பெரிதும் சேதமடைந்துள்ளன. யுக்ரேனிய படைகள் ரஷ்ய முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்த பாலங்களையும் தகர்த்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன