அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதி, கல்முனை அக்கரைப்பற்று, பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழ விற்பனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக வெள்ளரிப்பழம் விற்பனைக்கு அதிக கிராக்கி கிடைத்துள்ளதுடன் 150 ரூபாய் முதல் சுமார் 350 ரூபாய் வரை வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.