மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நாளை கொழும்பில் மாபெரும் போராட்டம்!

நாளை கொழும்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாண மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் எரிபொருள் பரச்சனை தலை தூக்கியுள்ளதன் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். ஆனால் இந்த அரசாங்கமும் ஒரு ஊமை அரசாங்கமாக மௌனம் காத்து வருகிறது அதாவது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் பிரச்சினை தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மௌனமாக வாயை மூடி பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

முதல் கூறினார்கள் கொரோனா பிரச்சனை காணப்படுவதாக ஆனால் தற்பொழுது கொரோனா நோய் ஒரு பிரச்சினை அல்ல தற்பொழுது டொலர் இல்லாத பிரச்சனை ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது

மீண்டும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடு மற்றும் மதவாதத்தை தூண்டி செயற்பாடுகளை இந்த அரசாங்கம் நடத்த தொடங்கியுள்ளது அத்தோடு இந்த மக்கள் மத்தியில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முனைகின்றது

எனினும் இந்த எரிபொருள் விலையேற்றம் கேஸ் விலையேற்றம் மற்றும் பொருட்களுக்கான கட்டுப்பாடு மருந்து தட்டுப்பாடு போன்றவற்றிற்று கோட்டபயஅரசாங்கத்தினால் எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை

எனவே இதனை கண்டித்து நாளை கொழும்பில் மகளிர் தினமாகிய நாளைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க வுள்ளதாகவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin