






தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும்,தமிழின படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்